தொழிலதிபருக்கு டிமிக்கி கொடுத்து மனைவி மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம்!

நீதிமன்றத்தில் ஹேபியர்கார்பியஸ் மனு தாக்கல் செய்து மீட்டு வந்த மனைவி கனவனுக்கு டிமிக்கி கொடுத்து மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் கனியான் விளை பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (41) தொழிலதிபரான இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சோனியாகாந்தி (35 ) மனைவியும் மகள் மற்றும் மகன் உண்டு.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வீட்டில் இருந்த சோனியா காந்தி 45- பவுன் நகை மற்றும் 13- லட்சம் ரூபாய் மற்றும் அவரது மகளுடன் மாயமானார் .இதுகுறித்து மோகன்ராஜ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் சோனியா காந்தியையும் அவரது மகளையும் இரண்டு மாதங்கள் ஆன பின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை, இந்நிலையில் மோகன் ராஜ் தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தர வேண்டுமென மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஹேபியர் கார்பியஸ் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தாய் மற்றும் மகளை தீவிரமாக தேடி வந்தனர் .அப்போது சோனியா காந்தி தனது கள்ளக்காதலனுடன் கேரளாவில் குழந்தையுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் தங்களை தேடி வருவதை தெரிந்து கொண்ட மூன்று பேரும் அங்கிருந்து டெல்லிக்கு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து போலீசார். 68 நாட்களுக்கு பின்பு சோனியா காந்தி, மேல்மிடாலத்தை சேர்ந்த மனோஜ் , மகள் ஆகியோரை பிடித்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சோனியா காந்தி தனது கணவருடன் செல்வதாக கூறினார். அதையடுத்து சோனியா காந்தி ,மகள் ஆகியோர் மோகன்ராஜுடன் வீட்டுக்கு சென்றனர் . மனோஜை கோர்ட்டு எச்சரித்து அனுப்பி வைத்தது. இந் நிலையில் சோனியா காந்தி கணவன், பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

அதன் பின்னர் சோனியா காந்திக்கு மொபைல் போன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது தெரிந்த ஒரு நபரிடம் மொபைல் போனை வாங்கி தனது கள்ளக்காதலனுடன் பேசியுள்ளார். அப்பொழுது மனம் மாறிய சோனியா காந்தி மீண்டும் கள்ளக்காதலனை மார்த்தாண்டம் பகுதிக்கு வரவழைத்து , அவரது புல்லட்டில் ஏறி தலைமறைவாகியுள்ளார்.

குழந்தைகளை அழைக்க சென்ற மனைவி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளிடம் அம்மா வந்தாரா என கேட்டுள்ளார். ஆனால் குழந்தைகள் தாயார் வரவில்லை என தெரிவித்துள்ளனர் .

அப்போது தான் மோகன்ராஜிக்கு தனது மனைவி மீண்டும் ஏமாற்றி விட்டார் என தெரிய வந்தது. இதை அடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் புகார் கொடுத்துள்ளார். புகாரில் வீட்டில் இருந்து பத்தாயிரம் ரூபாய் மற்றும் 12- பவுன் தாலி செயினையும் எடுத்து சென்று உள்ளதாகவும் ,இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு சென்றதாகவும் கூறி உள்ளார்.

மேலும் அவர் காவல் நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அப்போது அவர் கூறியதாவது :-

ஏற்கனவே பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மனைவியை திரும்பக் கொண்டு வந்ததாகவும் ,மனோஜ் தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது தனது குடும்ப நிம்மதியை கெடுத்து விட்டதாகவும் கூறி அழுதுள்ளார் .- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!