அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி!

4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களில் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.

பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா…, ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘‘உருகுதே மருகுதே…, ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகிய பாடல்கள், ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.

இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில் உள்ள இசை குடும்பத்தை சேர்ந்தவர். ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘‘வெண்ணிலவே…’’ பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே…’’ என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல், சாதனா சர்கம் பாடி வெற்றி பெற்ற பாடல்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!