ஒரு கிலோ தங்க பர்கர் ஆயிரம் ரூபாய்.. எங்கு கிடைக்கிறது தெரியுமா?

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தெருவோரமாக “பாபாஜி பர்கர் வாலே” என்ற பெயரில் ஒரு கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் சமீபத்தில் சுமார் 1 கிலோ எடை கொண்ட தங்க பர்கர் ஒன்று ரூ1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

உணவுகளில் தங்க இழைகள் கலந்த உணவு சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது. இனிப்புகளில்தங்க இழைகள் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் பிரபல உணவு தயாரிப்பாளரான சால்ட் பே என்பவர் தனது லண்டன் ரெஸ்டாரெண்டில் தங்க ஸ்டீக் என்ற உணவை தயாரித்து 1500 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாஹி ஹை என்பவர் தனது உணவு பிளாக் யூடிப் சேனலில் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பாபாஜி பர்கர் வாலே கடையில் செய்யப்படும் 1 கிலோ தங்க பர்கர் குறித்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் காய்களை கொண்டு பர்கர் செய்தார்.

மேலும் இந்த கடையில் ஒரு ஆஃபர் வேறு இருக்கிறதாம். இந்த பர்கரை வெறும் 5 நிமிடத்தில் யார் சாப்பிட்டாலும் அவர்கள் அந்த பர்கருக்கு காசு கொடுக்க வேண்டாம். மேலும் அவருக்கு ரூ1000 அன்பளிப்பாக வழங்கப்படும். என கூறப்பட்டுள்ளது. அல்லது இந்த பர்கரை காசு கொடுத்து பெற விரும்பினால் ரூ1000 விலையில் விற்பனையும் செய்யப்படும்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!