அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்திற்குள் ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!


அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தனது ஊழியர்கள் பணியாற்ற புதிய அலுவலகத்தில் சிறிய ‘அமேசான் காடு’ உருவாக்கியுள்ளது.


அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது. இதுபோன்று அமேசான் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டிடம் கட்டுகிறது.

தற்போது இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய ‘அமேசான் காடு’ உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது. இந்த அலுவலகத்தில் 3 குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும்.


ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை தங்க முடியும். இதற்குள் பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காட்டுக்குள் இருக்கும் உணர்வு ஏற்படும்.

இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!