டி20 உலக கோப்பை – இந்தியா- பாகிஸ்தான் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர்..?

டி20 உலக கோப்பை லீக் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அதிக பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரை சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கண்டுகளித்த பார்வையாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தகுதிச்சுற்று மற்றும் நேற்று முன்தினம் வரை நடந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 23.8 கோடி பார்வையாளர்களைக் கடந்து இந்த 20 ஓவர் உலக கோப்பை தொடர் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 16.7 கோடி பார்வையாளர்கள் கண்டு களித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2016-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் 13.6 கோடி பார்வையாளர்களைப் பெற்று இருந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!