மேக்புக் ப்ரோ மாடலில் அது பிடிக்கவில்லையா? இதை செய்யுங்கள் – ஆப்பிள் அசத்தல்!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடலில் அதை மாற்ற இதை செய்யுங்கள் என அறிவித்து இருக்கிறது.

2021 மேக்புக் ப்ரோ மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்படியான மாற்றங்களை கொண்டிருக்கும் 2021 மேக்புக் ப்ரோ மாடலில் புதிதாக நாட்ச் வைத்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து நாட்ச் அம்சத்திற்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், புதிய மேக்புக் ப்ரோ மாடலில் நாட்ச்-ஐ மறைக்க ஆப்பிள் புது வழிமுறையை அறிவித்து இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட செயலியை திறந்ததும், நாட்ச் இடையூறை மறைக்க செயலியை குவிட் செய்ய வேண்டும். பின் ‘பைண்டர்’ ஐகானை க்ளிக் செய்து, சைடுபாரில் உள்ள ‘அப்லிகேஷன்ஸ்’ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி செயலியை தேர்வு செய்து, ‘பைல்’ — ‘கெட் இன்போ’ அல்லது ‘கமாண்ட்-ஐ’ க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘இன்போ விண்டோ’வில் ‘ஸ்கேல் டு பிட் பிலோ பில்ட்-இன் கேமரா’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும், மேக்புக் ப்ரோவில் உள்ள நாட்ச்-இன் கீழ் குறிப்பிட்ட செயலி கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மாறிவிடும். இதே முறையை அனைத்து செயலிகளுக்கும் பின்பற்றலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!