அஷ்டமச் சனி காலத்தில் தவிர்க்க வேண்டியவை!

ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது.

முதலாவதாக யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. தேவையில்லாத அநாவசியப் பேச்சை குறைக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொதுவாக அஷ்டமத்து சனியில் கடன், நோய் அல்லது எதிரிகளைத் தான் சனிபகவான் கொடுப்பார். கடனையும் எதிரிகளையும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் நோய் வந்தால் சமாளிக்கவே முடியாது என்பதால் துரித உணவுகள், மது, புகை இந்த மாதிரி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மார்க்கெட் நல்லா இருக்கு, பார்ட்னர்ஸ் பார்த்துக்கு வாங்க நமக்கு எல்லாமே தெரியும் என்று நம்பி புதிய, பெரிய தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்தது வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு இந்த மாதிரி காரணங்களுக்காக இருக்கும் வேலையை உதறிவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க கூடாது. இந்த நேரம் இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

அஷ்டமச் சனியும் ஆயுளும்

அஷ்டமச் சனியால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. உண்மையில் இழுத்துக்கோ பரிச்சுக்கோ என மரணப்படுக்கையில் இருப்பவர்கள் நன்கு தேறி அமர்வார்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!