தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா? தம்பதியினர் சொல்லும் உண்மை!

இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்ல வாய்ப்பில்லை.


தம்பதிகளிடம் இல்லற இன்பத்தை அனுபவிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாக, உலகளாவிய நிலையில் நடைபெற்ற பாலியல் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கும் சுமார் 200 ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, பாலியல் நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். “இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்லவாய்ப்பில்லை” என்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மரியா ஹோன்ட்ஸ் அதற்கு விளக்கம் தருகிறார்.

ஆர்வம் குறைவதற்கான காரணங்களை அடுக்கி அவர்கள் நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

சமூக சூழல் சரியில்லாமை, குடும்பத்தில் நிலவும் மன இறுக்கம், மகிழ்ச்சியின்மை, பண நெருக்கடி, வேலை இழப்பு, நிம்மதியின்மை, உடல் ஆரோக்கியமின்மை, உடலுறவு காட்சிகளை அதிகமாக இணையதளங்களில் பார்த்தல் என்பன போன்ற பலவிதமான காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.

அதே நேரத்தில் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இணக்கமாக இருக்கும் தம்பதிகள் வழக்கம்போல் இல்லற இன்பத்தில் திளைக்கிறார்கள். மன நெருக்கம் கொண்டவர் களாலே மிக நெருக்கமாக இன்பத்தை அனுபவிக்க முடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

‘தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒன்றாக வாழப்பிடிக்கவில்லை. பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொல்லும் தம்பதிகளிடமும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். “அவர்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவர்கள் பிரிய விரும்புவதற்கு அவர்களுக்குள் தாம்பத்ய திருப்தியின்மை தோன்றியிருப்பதும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். பெண்களைவிட ஆண்களே தாம்பத்ய திருப்தியின்மைக்காக பிரிகிறோம் என்று வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெண்கள், தாம்பத்யத்தில் தங்களை திருப்தி செய்யவேண்டியது கணவரின் கடமை என்பதை உணர்த்துகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.

அமெரிக்காவில் 30 முதல் 60 சதவீதம் ஆண்கள் பாலியல் திருப்தியின்மைக்கு உள்ளாகியிருப்பதாக இந்த ஆய்வுத் தகவல் சொல்கிறது. அங்குள்ள பெண்களில் 40 முதல் 55 சதவீதம் பேர் இந்த பிரச்சினையை தாங்கள் எதிர்கொள்வதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் நடுத்தர வயதில் தாங்கள் அதிக இன்பம் அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.

‘நீங்கள் அனுபவிக்கும் இன்பத்தின் அளவு என்ன?’ என்ற கேள்விக்கு, கனடா பெண்கள் துல்லியமாக பதிலளித்திருக்கிறார்கள். அதோடு தங்கள் கணவர் எந்த அளவுக்கு திருப்தி யடைகிறார் என்பதையும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார்கள்.

‘தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா?’ என்ற கேள்விக்கு கணவன்-மனைவி இருவருமே மாறுபட்ட கருத்துக்களை கூறி, இப்போதும் இந்த விஷயத்தில் உலகளாவிய நிலையில் குழப்பம் நீடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முத்தாய்ப்பாக பாலியல் நிபுணர்கள் சில தீர்வுகளை கூறியிருக்கிறார்கள். அதன் விவரம்:

“உலகளாவிய நிலையில் இப்போது தம்பதிகளிடம் பாலியல் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. பசி, தாகம் போன்றதுதான் பாலியல் தேவையும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கணவரை திருப்திபடுத்த மனைவியும், மனைவியை திருப்தி படுத்த கணவரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். தங்களுக்குள் திருப்தியான உறவு இல்லை என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ‘அவ்வப்போது அவர்கள் உறவில் உச்சகட்டத்தை அடையத்தான் செய்கிறார்கள்.’ அதுவே அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை பூதாகரமாக்காமல், தணித்துக்கொண்டிருக்கிறது. இதை தம்பதிகள் உணர்ந்து, திருப்திக்கான வழிமுறைகளை ஆராய்ந்து உறவை மேம்படுத்தவேண்டும்.

தாம்பத்யத்திறனை மேம்படுத்த பேச்சு மிக அவசியம். பேச்சு பாலியல் பற்றிய சூடான கதைகளை குறித்தும் இருக்கலாம். அத்தகைய பேச்சுடன், செயலில் இறங்கும் தம்பதிகள் இன்பத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் அதிகமாக நெருக்கமும் இருக்கிறது. அதனால் உங்கள் இணையோடு அந்தரங்கமாகவும் நிறைய பேசுங்கள்.

அது மட்டுமின்றி, இணையின் விருப்பங்களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள். விருப்பங்களை மனந்திறந்து சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக பெண்ணின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது இருவருக்குமே தாம்பத்ய செயல்பாடு அதிக மகிழ்ச்சியை தரும். தம்பதிகள் வயதினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா வயதிலும் அவர்கள் படுக்கை அறையில் தங்களை இளைஞராகவே பாவித்துக்கொள்ள வேண்டும். அந்த நினைப்பே அவர்களுக்கு கூடுதல் பலத்தையும், மகிழ்ச்சியையும் தரும்” என்றும் சொல்கிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!