ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்ப தலிபான்கள் தடை !

பெண்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதாலும், போட்டியின்போது ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே விசில், ஆட்டம் இல்லாமல் இருக்காது.

உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!