பிக்பாஸ் சீசன் 5ல் இவரா! தீயாய் பரவும் தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான்கு சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், ஐந்தாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர் பட்டியல் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இமான் அண்ணாச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!