ராணுவ விமானங்களில் ஊஞ்சல் விளையாடும் தலிபான்கள் – அமெரிக்காவை சீண்டிய சீனா!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்க ராணுவம் விட்டுவிட்டு வந்த ராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ. அந்த ட்வீட்டில் அவர், பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் ராணுவ தளவாடங்களும்.

தலிபான்கள் அமெரிக்க ராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே தொடர்ந்து அமெரிக்காவை சீனா கிண்டலடித்து வருகிறது.- source: kamadenu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!