40 வயதில் நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்திற்கு காரணம் என்ன..?

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லாவின் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று ஒஷிவாரா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாரடைப்பு அவருக்கு மரணத்துக்கு வழிவகுத்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நடிகரின் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில உறுப்பு மாதிரிகள் மருத்துவ கல்லூரியின் நோயியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!