தமிழர் உருவாக்கிய ‘இப்போ பே’ செயலி பற்றி தெரியுமா..?


முன்னொரு காலத்தில் பணம் வாங்குதல், கொடுத்தல், பெற்ற பணத்தை சரிவர நிர்வகித்தல் ஆகியவை மிகக் கடினமாக இருந்தது. இவற்றை தீர்க்க பல ஃபிண்டெக் நிறுவனங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை மூலதனமாக கொண்டு பணம் செலுத்துதல், கடன் வழங்குதல், காப்பீடு மற்றும் தனிநபர் நிதி மேலாண்மை ஆகியவற்றை எளிதாக்கியது.

ஃபிண்டெக் நிறுவனங்களான PayTM, Razorpay, PayU, Mobikwik, Google Pay ஆகியவை இந்திய ஃபிண்டெக் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றன. ஆனால் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே பெருநகர, கிராமப்புற இடங்களை நோக்கி தங்களின் சேவையை ஆற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘இப்போ பே’. வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்று சேகரிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், வணிகங்களை அனுமதிக்கும் கட்டண ஒருங்கிணைப்பாளராக இயங்கி வருகிறது.

‘இப்போ பே’வின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அதிகாரியான மோகன், ராமேஸ்வரத்தில் உள்ள தாமரைக்குளம் என்ற சிறிய கிராமத்தில் வசித்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தன் பள்ளிப் படிப்பை தமிழ்வழிக்கல்வி மூலம் முடித்து பின்பு பொறியியல் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே தான் ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிவந்த மோகன் பின் அந்த பணியில் இருந்து விலகி, தன் நண்பரான ஜெயக்குமாருடன் இணைந்து ‘இப்போ பே’ என்ற நிறுவனத்தை 2020-ம் ஆண்டு தொடங்கினார். அதற்கு தனது நண்பரான ஜெயக்குமாரை இணை நிறுவனர் மற்றும் துணை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்தார். இந்நிறுவனம் முதன் முதலில் பதினைந்து பேர் கொண்ட குழுவாக தொடங்கப்பட்டது. இது தற்சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு தொடங்கப்பட்டது.

‘இப்போ பே’ என்ற சொல்லின் அர்த்தம் தற்போது செலுத்து என்பதாகும். இப்போ பே தொடங்குவதற்கு முதன்மையான நோக்கம் அனைத்து ஆஃப்லைன் வணிகர்களை தங்களின் பணப்பரிவர்த்தனையை நிகழ்நிலையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

அதை ஊக்குவிக்க வணிகர்கள் தங்களின் கட்டணத்தை ஏதேனும் ஒரு PayTM, Mobikwik, Razorpay, GPay செயலியின் வாயில் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு டிஜிட்டல் பரிமாணத்தை தங்களுடைய எளிமையான பயனர் நடப்பர்கினங்க இடைமுகத்தை அறிமுகப்படுத்துகிறோம். இத்தொழில்நுட்பத்தின் இலக்கு சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், தனிப்பட்டோர், செய்தித்தாள் மற்றும் பால் விற்பனையாளர், பெண்தொழில் முனைவோர் ஆகியோரை அடைய வேண்டும் என்பதுதான்.

‘இப்போ பே’ முக்கிய அம்சங்கள்

‘இப்போ பே’ அனைத்து வித ஆஃப்லைன் வணிகர்களையும் தங்களின் கட்டணத்தை நிகழ்நிலை முறையின் மூலம் பெற வைக்க வேண்டும் என்பதுதான். அதை ‘இப்போ பே’ வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணத்தை ஏதேனும் ஒரு செயலியின் வாயில் PayTM, Mobikwik, Razorpay, GPay செயலியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இனி வணிகர்கள் தங்களின் கட்டண பரிவர்த்தனையை செயலியின் ௨ள்ளடக்கிய பேரேடு செய்துக்கொள்ளலாம்.

தொழில் முனைவோர் மற்றும் நிகழ்நிலை வர்த்தகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இனி ‘இப்போ பே’வின் செயலியின் மூலம் இணையதள அங்காடி தொடங்கி தங்களின் பொருட்களை சமூக வலைதளங்கள் Whatsapp, Facebook, Instagram மூலம் காட்சிபடுத்தி அற்றை விற்கலாம்.

‘இப்போ பே’வின் உள்ளடக்கிய விலைப்பட்டியல் மென்பொருள் தங்கள் வாடிக்கையாளர்களின் கட்டணத்திற்கு ஏற்ப மதிப்பு கூட்டு வரிகள், தள்ளுபடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விலைப்பட்டியலை உருவாக்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தங்களின் கட்டணத்தை எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

இச்செயலியின் மூலம் இனி வணிகர்கள் எல்லா சர்வதேச நாணயங்களை பெற்றுக்கொள்ளும் வசதியை பெற்றுள்ளது. எனவே இத்தகைய இணையதள கட்டண வசதியோடு இப்போ பே தமிழகத்தின் பொருளாதார சந்தையில் தலைவராகவும் வருங்காலத்தில் தன் வசதிகளை இந்தியா முழுவதும் செயல்படுத்த திட்டம் உள்ளதாக கூறுகிறார் மோகன்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!