ஐபோனை புது அப்டேட் செய்தது தப்பா போச்சு – புலம்பும் பயனர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனர்கள் புது அப்டேட் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஐஒஎஸ் 14.6 அப்டேட் செய்ததில் இருந்து ஐபோன் பேட்டரி வெகு விரைவில் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புது அப்டேட் ஆப்பிள் கார்டு பேமிலி, ஆப்பிள் பாட்காஸ்ட் சந்தா, ஏர்டேக் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கியது.

புது அம்சங்கள் தவிர சில பிழை திருத்தங்களையும் இந்த அப்டேட் வழங்கியது. எனினும், சமீபத்திய அப்டேட் ஐபோனின் பேட்டரியை விரைவில் தீர்ந்து போக செய்கிறது. பேட்டரி பிரச்சினையை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் சப்போர்ட் போரம் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ஐபோன் XS பயனர் ஒருவர் தனது மொபைலில் உறங்கும் முன் முழு சார்ஜ் செய்த போதும், காலையில் பேட்டரி அளவு 30 சதவீதம் வரை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனினை பயன்படுத்தாத நிலையிலும் 70 சதவீத சார்ஜ் காலியானதாக அவர் தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!