பரவும் ஒருவித பூஞ்சை தொற்று… கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்து..!

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது முகோர்மைசிசீஸ் எனப்படும் பூஞ்சை அவர்களையும் தொற்றி கொள்கிறது.

கொரோனா நோயாளிகளிடம் ஒருவித பூஞ்சை தொற்று ஏற்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பல நோயாளிகள் இந்த தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். முகோர்மைசிசீஸ் எனப்படும் பூஞ்சையால் இந்த தொற்று ஏற்படுகிறது.

இது ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது இந்த பூஞ்சை அவர்களையும் தொற்றி கொள்கிறது.

இதுவே சிலருடைய உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாக பிரபல நிபுணர் மணீஸ் முஞ்சால் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவிய போதும் சிலரை இந்த பூஞ்சை தாக்கி இருந்தது. ஆனால் இப்போது இதன் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

இந்த பூஞ்சை பாதிப்பால் சிறுநீரகம், இதயம் போன்றவையும் பாதிக்கப்படும். கண் பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். எலும்பு மச்சையிலும் பாதிப்பை உருவாக்கும் என்று டாக்டர்கள் கூறினர்.

கன்னங்களில் வீக்கம், தீவிர மூக்கடைப்பு, கண்ணில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் இந்த பூஞ்சை பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதற்கு உரிய சிகிச்சைகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!