கரு கலைந்த பின் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்!

வது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும்.


தாய்மையடையும் பெண்கள் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. துரதிருஷ்டவசமாக நடக்கும் அந்த நிகழ்வில் இருந்து தாய்மார்கள் மீண்டு வருவது கடினம். கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். கருப்பையும் பாதிப்பிற்குள்ளாகலாம்.

மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!