ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி கொரோனா நோயாளியை காப்பாற்றிய சோனு சூட்

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளியை காப்பாற்ற நடிகர் சோனு சூட், ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவி உள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கும் இடம் கிடைக்க வில்லையாம்.

இதையடுத்து டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டுக்கு நிலமையை எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் கைலாஷ் அகர்வால் தற்போது நலமுடன் உள்ளாராம். சோனு சூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!