படுக்கைக்கு போக முன்பு புதுமணத்தம்பதிகள் இப்படி சாப்பிட்டால் தூள் பறக்குமாம்..!

தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.


கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்களிடையேயான தாம்பத்திய உறவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தாம்பத்ய உறவை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஆர்வமும், செயல்பாடும் அவசியமானதாகும். தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.

புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து துணைபுரிகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.

ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.

தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

காதல் உணர்வு ஏற்படும்போது அதை மேலோங்கச்செய்யும் சக்தி ‘பி.ஈ.ஏ’ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. காதல் வசப்படும்போது இந்த அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தரமான சாக்லேட்டை சாப்பிடும்போது சிறிதளவு கிடைக்கிறது. இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே கருப்பு சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் தம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!