தினமும் தேனில் ஊறவைத்த ஒரு பூண்டினை சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க..!

Incredible Benefits of eating garlic with honey

நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த பூண்டினைதேனில் ஊறவைத்து சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகளை தூய்மையான தேன் ஜாடிக்குள் போட வேண்டும்.

நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள்.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால்ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

கிடைக்கும் நன்மைகள் என்ன?

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது.

பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!