தீப்பற்றி எரியும் வீட்டு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தை…. எவ்வளவு ஏலம் போனது..?

தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோனியா மாகாணத்தில் வசித்து வந்தவர் டேவ். இவரின் மகள் பெயர் ஜூ ரோத். 2005 ஆம் ஆண்டு ஜூ ரோத்திற்கு 10 வயது நிரம்பி இருந்தது. அந்த ஆண்டு ஜூ ரோத் வசித்துவந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீடு மீது எதிர்பாராத விதிமாக தீப்பற்றியது. இதனால், டேவ் தனது மகள் ஜூ ரோத்தை தனது வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்று பக்கத்து வீட்டில் பற்றி எரியும் தீயை மீட்புக்குழுவினர் அணைக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அப்போது, அந்த வீடு தீப்பற்றி எரியும் போது 10 வயது சிறுமியான ஜூ ரோத் அந்த வீட்டின் அருகில் முகத்தில் புன்னகையில் நின்றுகொண்டிருந்தார். தனது மகள் ஜூ ரோத் பற்றி எரியும் வீடு முன் சிரித்துக்கொண்டு நிற்பதை டேவ் புகைப்படமாக எடுத்தார்.

அந்த புகைப்படம் ‘டிசாஸ்டர் கெல்’ என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தை மையமாக வைத்து பல்வேறு மீம்கள் வெளியாகி வருகின்றன.

பக்கத்து வீட்டுக்காரரின் வீடு பற்றி எரியும் போது அந்த சிறுமி சிரிக்கும்புகைப்படம் மிகவும் பிரபலமானது. அந்த புகைப்படத்தின் உண்மையான பிரதி டேவின் மகள் ஜூ ரோத்தின் கைவசம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜூ ரோத் தற்போது 21 வயதை எட்டியுள்ளார். அவர் தனது பிரபல புகைப்படமான வீடு பற்றி எரியும் போது அதை பார்த்து சிரிக்கும் வகையிலான அந்த புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டார். அதற்காக, ஏலம் விடப்பட்டது.

அந்த ஏலத்தில் ’டிசாஸ்டர் கெல்’ ஜூ ரோத் பக்கத்து வீட்டுக்காரரின் வீடு எரியும் போது சிரிக்கும் உண்மையான புகைப்படம் 4 லட்சத்து 73 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் இந்திய மதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பணத்தை தனது படிப்பு செலவுக்கும், நற்பணிகளுக்கும் பயண்படுத்த உள்ளதாக தற்போது 21 வயது நிரம்பிய ஜூ ரோத் என தெரிவித்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!