உள் உறுப்புகளைப் பலப்படுத்தும் பத்ம மயூராசனம்…!

‘பத்ம’ என்றால் ‘தாமரை’ என்றும் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்றும் பொருள் என்று நாம் அறிவோம். இதற்கு ஆங்கிலத்தில் Lotus Peacock Pose என்று நிலையில் காலை வைத்து மயூராசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பத்ம மயூராசனம் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. மணிப்பூரகம் தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை, தன்மதிப்பு ஆகியவை அதிகரிக்கின்றன. மேலும் இச்சக்கரம் ஆற்றலை வளர்க்கிறது; பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது.

பலன்கள்

கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
அசீரணத்தை சரி செய்கிறது
முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
வயிற்று உள் உறுப்புகளைப் பலப்படுத்துகிறது
உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது
கால் மூட்டுகளைப் பலப்படுத்துகிறது; கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது
மனதை ஒருநிலைப்படுத்துகிறது

செய்முறை

பத்மாசனத்தில் அமரவும்.
மூச்சை வெளியேற்றியவாறு முன்னால் குனிந்து உள்ளங்கைகளைத் தரையில் வைக்கவும். விரல்கள் கால்களை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
கை முட்டிகளை மடக்கி இரண்டு முட்டிகளையும் சற்று அருகே கொண்டு வரவும்.
முன்னால் சாய்ந்து இரண்டு கை முட்டிகளுக்கு மேல் வயிற்றை வைக்கவும்.
கைகளால் பெரும்பாலான உடல் எடையைத் தாங்குமாறு மேலும் முன்னால் சாயவும்.
கால்களைத் தரையிலிருந்து பத்மாசன நிலையிலேயே உயர்த்தவும். இப்பொழுது உங்கள் கைகளால் உடலைத் தாங்கியிருப்பீர்கள்.
30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.
ஆசனத்திலிருந்து வெளிவர, கால்களைத் தரையில் வைத்து, உடலைத் தளர்த்தி தரையில் பத்மாசனத்தில் அமரவும்.

குறிப்பு

தோள், கை மற்றும் மணிக்கட்டில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் பத்ம மயூராசனத்தைத் தவிர்க்கவும். மயூராசனம் நன்கு பழகிய பின் பத்ம மயூராசனம் செய்வது நல்லது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!