ஸ்ரீ சாய் சரிதத்தை ஏன் படிக்க வேண்டும் தெரியுமா..?

தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால், ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஆன்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்து கொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்வி

ஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று கூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆன்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர்.

முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆன்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார்.

உண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை.

ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், ‘ ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது.? ‘ ஏனென்று கேட்டார். மகரிஷி, சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும் எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே ‘ என்றார்.-Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!