11-ம் இடத்தில் எந்த கிரகம் இருக்கு..? எந்த தொழிலில் சம்பாதிக்கலாம்?

ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ராசிக்கு எந்த தொழில் செய்தால் சம்பாதிக்கலாம் என்பதை நன்கு ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது. அதற்கு கடின உழைப்பும், நம்பிக்கையும் கண்டிப்பாக தேவை.

ஆனாலும் ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ராசிக்கு எந்த தொழில் செய்தால் சம்பாதிக்கலாம் என்பதை நன்கு ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் லக்னத்தில் இருந்து 11-ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி விவரம் வருமாறு:-

  • 11-ல் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தை வழித் தொழில்கள் மூலம் லாபம் பெறுவார்கள்.
  • 11-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் வாகன சுக போக வாழ்வோடு வாழ்வார்கள். ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு புது மனைவியால் சொத்துக்கள் குவியும்.
  • 11-ல் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் துணிச்சல் உள்ளவர்கள். பல வழிகளிலும் பொருள் கிடைக்கும். நினைத்த மிகப்பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும் வீடுகளும் அமையும்.

*11-ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு மன வளமும் அறிவு வளமும் பெருகும். மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல் நிர்வாகம், ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

  • 11-ல் குரு இருக்கப் பிறந்தவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
  • 11-ல் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள். பெரும் பகுதி ஊர் சுற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். நாகரிக வஸ்துகள், வாசனைத் திரவியங்கள் விற்றுப் பொருளீட்டுவார்கள்.
  • 11-ல் சனி இருக்கப் பிறந்தவர்கள். பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டிடம், ஒப்பந்த தொழில்கள் கை கொடுக்கும்.
  • 11-ல் ராகு இருக்கப் பிறந்தவர்கள். ராணுவத்துறைக்குச் சென்று பொருளீட்டுவார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறுவார்கள்.
  • 11-ல் கேது இருக்கப் பிறந்தவர்கள். திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். ஏழையாகப் பிறந்தவரும் திடீர் லாபத்தைப் பெறுவார்கள். தர்மகாரியம் செய்வார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!