60 வயதான மாமனாரை கரம்பிடித்த இளம்பெண்..!

அமெரிக்காவில் தன்னை விட 30 வயது அதிகமான மாமனாரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். எரிகா குயிகிள் (31) என்ற பெண் தனது 16வது வயதில் ஜெப் (60) என்பவரை சந்தித்தார். அதாவது ஜெப்பின் வளர்ப்பு மகனான ஜஸ்டினை தான் எரிகா திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து கணவரை விவாகரத்து செய்தார் எரிகா. அவருக்கும் ஜெப்புக்கும் காதல் ஏற்பட்டதே இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமாகும்.

இதையடுத்து தனது மாமனாரான ஜெப்பை எரிகா கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் தம்பதி தங்கள் முதல் குழந்தையை பூமிக்கு வரவேற்றனர்.

இது குறித்து எரிகா கூறுகையில், எல்லாவற்றையும் மீறி எங்களின் உறவுமுறை சரியாக உள்ளது. எங்களுக்குள் எந்தவொரு வெறுப்பு உணர்வும் இல்லை.

என் கணவருக்கும் எனக்குமான வயது வித்தியாசத்தை பெரியதாக நாங்கள் எடுத்து கொள்வதில்லை. சில பிணைப்புகள் புரிந்து கொள்ள மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், நாள் முடிவில் காதல் வெற்றி பெற்றால், ஒருவர் கேள்வி எழுப்பக்கூடிய அளவுக்கு அந்த உறவுமுறை இருக்காது என கூறியுள்ளார்.- source: tamil.express * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!