கொரோனா தடுப்பூசி போட்டால் எவ்வளவு நாள் பாதுகாப்பாக இருக்கும்..?

கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.

உலகையே இன்றுவரை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் நம்புவது தடுப்பூசிகளைத்தான்.

இந்த தடுப்பூசிகளின் 2 டோஸ்களை செலுத்த வேண்டியதாயிருக்கிறது. இரண்டாவது டோஸ் செலுத்தி 2 வாரங்கள் முடிந்தபின்னர்தான் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அதுசரி, இந்த தடுப்பூசியால் கொரோனாவுக்கு எதிராக கிடைக்கிற பாதுகாப்பு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது அனைத்து தரப்பினரின் ஒருமனதான கேள்வியாக அமைந்துள்ளது. அதற்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்.

டெபோரா புல்லர் (தடுப்பூசி ஆராய்ச்சியாளர், வாஷிங்டன் பல்கலைக்கழகம்):-

இதை ஆய்வுகள் செய்துதான் சொல்ல முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களை ஆய்வு செய்ய வேண்டும். எந்த கட்டத்தில் மக்கள் அந்த வைரசுக்கு மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

இதுவரை பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் தொடர்ச்சியான சோதனை, அதன் 2 டோஸ் தடுப்பூசிகள் 6 மாதங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை காட்டுகிறது. மேலும் நீண்ட காலம் கூட இருக்கலாம். மாடர்னா தடுப்பூசி பெற்ற நபர்களுக்கு 2-வது டோஸ் முடிந்த 6 மாதங்களுக்கு பிறகும் குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு பொருள் இருந்தன.

நோய் எதிர்ப்பு பொருளும் முழுதாக தங்கள் கதையை சொல்வதில்லை. வைரஸ்கள் போன்ற ஊடுருவும் நபர்களை எதிர்த்து போராடுவதற்கு நமது நோய் எதிர்ப்பு அமைப்புகளுக்கு பி மற்றும் டி செல்கள் எனப்படும் பாதுகாப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு பொருள் குறைந்தபின்னரும் கூட அவை நீடிக்கலாம். அவை முழுமையாக தொற்றை தடுக்காவிட்டாலும்கூட, அதன் தீவிரத்தை குறைக்க உதவும். ஆனால் இந்த செல்கள், கொரோனாவுடன் எவ்வளவு காலம் எதிர்த்து போராடும் என்பது தெரியவில்லை.

டாக்டர் கேத்லின் நியூசில் (தடுப்பூசி நிபுணர், மேரிலாந்து பல்கலைக்கழகம்):-

தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு பாதுகாப்பு அளிக்கலாம். அவை தட்டம்மை தடுப்பூசிகள்போல வாழ்நாளெல்லாம் பாதுகாப்பு தராது.

இந்த வைரஸ் பரந்த அளவுக்கு நடுவில் எங்காவது இருக்கும்.

மெகுல் சுதர் (எமோரி தடுப்பூசி மையம்):-

தற்போதுள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரசின் குறிப்பிட்ட ஸ்பைக் புரதத்துக்கு எதிராக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். ஆனால் வைரஸ்கள் உருமாறுகிறபோது, தடுப்பூசிகளும் அவற்றின் செயல்திறனை அதிகரிக்கிற வகையில் மேம்படுத்தப்படவேண்டும்.

இதுவரையில் தடுப்பூசிகள், வெளிவந்த குறிப்பிடத்தக்க வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பானதாக தோன்றுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மொத்தத்தில் இவ்வளவுகாலம்தான் தடுப்பூசிகள், கொரோனாவுக்கு எதிரான செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்களாலும் உறுதிபட கூற முடியவில்லை என்பது தெளிவாகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!