மேஷ ராசிக்கான பிலவ புத்தாண்டு 2021 பலன்கள்!

மேஷ ராசி, மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு தொழில், உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு ஏற்றமும், லாபமும் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் முயற்சி, திறமைகளுக்கு ஏற்ப லாபங்கள் கண்டிப்பாக பெற்றிடலாம். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு தவிர்ப்பது அவசியம். அதே போல் நீங்கள் மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, ஆலோசித்து பொறுமையாக, நிதானமாக செய்வது அவசியம்.


ஆண்டு தொடங்கும் போது உள்ள கிரக நிலவரம் :

மேஷத்தில் சூரியன், புதன், சூரியன்

ரிஷபத்தில் ராகு

மிதுனத்தில் செவ்வாய்

விருச்சிகத்தில் கேது

மகரத்தில் ஆட்சி பெற்ற சனி

கும்பத்தில் அதிசார பெயர்ச்சி பெற்ற குரு

குருவின் அற்புத பலன்கள் :

குடும்பத்தில் இனிமை

தனக்காரகன் குருவின் மிகவும் விசேஷமான 9ம் பார்வை உங்கள் ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால், இதுவரை திருமணம், உள்ளிட்ட சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு ஏற்ற வரன் தேடி வரும்.

உங்கள் துணையுடனான அன்பும், அன்னியோன்னியமும் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் இன்பமும், நிம்மதியான மன நிலை ஏற்படும்.

குழந்த பாக்கியம் :

குழந்தை பாக்கியத்தை அருளக்கூடிய குரு பகவான் 11ம் இடத்தில் அமர்ந்து உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் குழந்தை செல்வம் கிடைக்க அருமையான சூழல் உண்டாகும்.

பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அவர்கள் விரும்பிய படி கல்வி, வேலை தொடர்பான முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.

பிள்ளைகளின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெற்றோர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்ககூடியதாக இருக்கும்.

சூரியன் தரும் பலன் :

தமிழ் புத்தாண்டு தொடங்கும் மாதத்தில் உங்கள் ராசிக்கு 5ம் அதிபதியான சூரியன் உச்சமாக இருப்பதால் நீங்கள் நினைக்கக்கூடிய, பல கால ஆசைகள் வெற்றியும், கனவு நினைவாக்கக்கூடிய நிலை இருக்கும்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். குருவால் சகோதர உறவுகள் மேம்படும்.

சுக்கிரனால் உங்களின் நிதி நிலை மேம்படும். திருமணம் மட்டுமல்லாமல் காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். இரண்டாம் திருமணம் செய்ய முயல்பவர்களுக்கு நடக்க வாய்ப்புள்ளது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!