வாரத்துக்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தினால்..!

பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்.


வாரத்துக்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தினால் மிகவும் ஆரோக்கியமும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் என்று பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.


பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று தெரிவிக்கிறார்கள்.

.பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது.

அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து பீட்ரூட் ஜூஸ் செயல்படக்கூடியது. அதனால் பீட்ரூட் அருந்துவதற்கு முன்பு முதியவர்கள் தங்கள் உடலுக்கு ஒத்துவருமா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!