ஷீரடி சாய்பாபாவின் அருமையான நற்சிந்தனைகள்!

  • உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி.
  • வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.
  • பொறுமையையும், பக்தியையும் ஒருபோதும் கைவிட வேண்டாம். கால தாமதமாவதும் உங்களின் நன்மைக்காகவே.
  • யாரிடமும் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம்.
  • அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.
  • நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.
  • தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.
  • கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே கிடையாது. அனைத்தும் அவரின் ஆணையால் தான் நடக்கிறது.
  • பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள்.
  • பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவேகம்.
  • மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் விவாதம் செய்வதால் யாருக்கும் பயனில்லை.
  • காவியுடை தரித்து காட்டில் போய் அமர்ந்தாலும், பிறவி பெருங்கடலில் இருந்து தப்ப முடியாது.
  • மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
  • உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.
  • கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
  • இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்து இருப்பதில்லை.
  • தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.
  • நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.
  • கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.
  • உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே சமயத்தில் விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவும் வேண்டாம்.
  • கடவுள் சிந்தனை மனதில் பதிய வேண்டும். உலக இன்பங்களுக்காக ஒருபோதும் வழி தவறாதீர்கள்.
  • பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.
  • காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.
  • இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
  • பணத்திற்கு அடிமையாகி கருமியாகி விடாதே. தர்ம சிந்தனையோடு ஏழை எளியவருக்கு உதவி செய்.
  • உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே உண்மையான விவேகம்.
  • குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழ வைத்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.
  • துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவுவது உங்களின் கடமையாகட்டும்.
  • அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.
  • ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்.
  • ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள். உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.
  • கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.
  • உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.
  • பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.
  • பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக கூடாது.
  • மனதை தூய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.
  • தத்துவங்களை கற்பதால் மட்டும் கடவுளை அறிய முடியாது. தீய எண்ணத்திற்கு இடமின்றி மனதை பாதுகாத்தால் அவனருள் கிடைக்கும்.
  • பிறரை இழிவாக எண்ணுவதும், தன்னைத் தானே பெருமையாக எண்ணி மகிழ்வதும் விவேகமற்ற செயலாகும்.
  • பிறரின் பாதத்தை பிடிப்பது மட்டும் சேவையாகாது. உள்ளம், உடல், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.

*பழுத்த மரம் வளைந்து கொடுப்பது போல, பணக்காரர்களும் தலைக்கனம் சிறிதும் இன்றி மற்றவரை மதிப்புடன் நடத்த வேண்டும்.

  • யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் வாழுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
  • இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதுங்கள். கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.
  • வெறும் ஏட்டுக் கல்வியால் பயன் உண்டாவதில்லை. தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும்.
  • கள்ளம் கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள். பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

*பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்துப் போற்றுங்கள்.

  • துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

*எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள்.

*எல்லோரையும் நேசியுங்கள். யாரிடமும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

  • உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. – Source: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!