ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போடும்போது இந்த விடயங்களில் அவதானமாக இருங்க..!


நம்முடைய ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்னையே சார்ஜ் பிரச்னை தான். அதை சரிசெய்ய என்னதான் செய்வது?…

இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம் – இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களுக்கு ஏற்படும் ‘stress’எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் ‘stress’ அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் இந்த விடயங்களை நீங்கள் கடை பிடிப்பது அவசியம்.


1) பேட்டரி சார்ஜ் முழுமையடைந்த பின்னும் சார்ஜரில் இணைத்து வைத்திருக்க வேண்டாம்.

இரவு நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடும் போது, சார்ஜ் முழுமையடைந்த பின்னும் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதால் பேட்டரி சேதமடையலாம். 100% சார்ஜ் ஏறியப்பின்னும் சார்ஜ் ஏறுவதால் பேட்டரிக்கு High Stress மற்றும் high Tension ஏற்படும். எனவே இரவு முழுவதும் சார்ஜ் போடும் பழக்கம் தவறான ஒன்று.

2) 100% சார்ஜ் ஏற்ற வேண்டாம்.

பேட்டரிகளை 100% முழு சார்ஜ் செய்வதால் ஏற்படக்கூடிய voltage stresses பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடும் தன்மையுடையது. எனவே தேவைப்படும் போது கிட்டத்தட்ட முழு அளவு சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை பாதுகாக்க ஏதுவானது.


3) உங்களால் முடியும் போது சார்ஜ் போடுங்கள்

பேட்டரி சார்ஜ் போடும் போது நீண்ட நேரம் சார்ஜ் போடுவதை விட அவ்வபோது சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே சிறந்தது. போன் பேட்டரி 10%-க்கு குறைவாக செல்லும் போது சார்ஜ் போடுவதே சிறந்தது. இது சாத்தியமற்றதாக தோன்றினாலும், ஒருநாளில் பலமுறை சார்ஜ் போடுவதில் பிழையேதும் இல்லை.

4) ஸ்மார்ட் போன்களை குளிர்ச்சியாக பார்த்துக் கொள்ளுதல்

அதிகப்படியான சூடு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்குமே கேடு விளைவிக்கக் கூடியது. எப்பொழுதெல்லாம் உங்கள் போன் சூடாக உள்ளதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் போனை அனைத்துவிடுவதோ அல்லது சார்ஜரில் இருந்து எடுத்துவிடுவதோ நல்லது. கடும் வெப்பத்தில் செல்லும் போது, போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.-Source: tamil.eenaduindia

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05