பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன் இது சத்தியம்..!

ஷிர்டிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை ஷீரடியில் தங்கமுடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்! சுய முயற்சிகளால் மட்டும் எவரும் ஷிர்டிக்குப் போக முடியவில்லை. எவ்வளவு ஆழமான ஆவல் இருந்தாலும் விருப்பப்பட்ட நாள் வரை அங்கே தங்க முடியவில்லை.

காகா மகாஜனி ஒருமுறை ஷீரடியில் ஒரு வாரம் தங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பம்பாயிலிருந்து ஷீரடிக்கு வந்தார். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஏற்பாடுகள் முன் கூட்டியே ஆரம்பிக்கப்படும், சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும். பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடுவர். மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்ட்டமி பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா மகாஜனி சில நாட்களுக்கு முன்னமே வந்துவிட்டார். ஆனால், முதல் தரிசனத்திற்குப் போன போதே பாபா கேட்டார். ‘ஆக, எப்போது வீடு திரும்பப் போகிறீர்?’ இதைக் கேட்ட மகாஜனி திடுக்கிட்டார்.

மகாஜனிக்கு அப்போதுதான் விளங்கியது, பாபா தன்னுடனே தான் இருக்கிறார். என்றும் தன் பக்தர்களின் அன்றாட வாழ்கையில் அவரும் ஒன்றி, நல்லதை சுட்டிக் காட்டி நம்மை ரட்சிக்கிறார்.

இதை புரிந்து கொண்ட மகாஜனி உள்ளத்தில் ஆனந்தம்!

நடப்பதை தாராளமாக பொறுத்துக்கொள்வோம், அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, கசப்பான செயலாக இருந்தாலும் சரி. அல்லாமாலிக் நம்மை காப்பவர். நடப்பதை சுமப்பவரும் அவரே!

பாபா உதியை வழங்கினார்:

பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து முடித்த பின்னர் ஓய்ந்து சாம்பலாக்கப்படும். அவர்களின் உடல் சாம்பலாக்கப்படும் என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே

“பிரம்மம்” ஒன்றே மெய்பொருள் என்பதையும், பிரபஞ்சம் நிலையற்றது என்றும் தந்தை,தாய்,மகன் இவர்கள் யாவரும் நம்முடையது அல்ல என்றும் இதனால் உபதேசித்தார் – ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

ஷீரடி சாய்பாபா: இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை எப்போதும் உணர். பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன். இது சத்தியம்

ஸ்ரீ சாயி தரிசனம்: என்னை நம்புகிறவர்களே! உங்களுக்கு சொல்வது இதுதான்.. முதலில் எனக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து, எனக்கே முக்கியத்துவம் தாருங்கள். நான் அங்கே ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டபின், உங்கள் உலக விஷயங்களுக்காக நான் லெளகீகத்திற்கு உரியவனாக என்னை மாற்றிக்கொண்டு உங்கள் சார்பில் வாதாடுவேன். எனது வாதம் வெற்றியைத் தரும். நீங்கள் எப்போதும் ஜெயிப்பீர்கள். – Source: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!