கரு கரு கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் நார் ஹேர் மாஸ்க்!


தேங்காய் ஓட்டின் வெளிப்புற அடுக்கில் இருந்து பெறப்பட்ட நார் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

கோகோ கொயர் என்பது தேங்காய்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார் ஆகும். தேங்காயின் வெளிப்புற அடுக்கு பொதுவாக கழிவு என்று கருதப்படுகிறது, ஆனால் அது உண்மையல்ல. இது மறுசுழற்சி செய்யப்பட்டு கைவினைப்பொருட்கள், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேங்காய் நார் தாவரங்கள் வளர்ச்சிக்கும் சிறந்தது. ஆனால் இது தவிர உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் நார் சிறந்தது. தேங்காய் ஓட்டின் வெளிப்புற அடுக்கிலிருந்து பெறப்பட்ட நார் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இது உங்கள் உச்சந்தலையில் உள்ள பி.எச் அளவை சமநிலைப்படுத்துவதற்கும், உங்கள் தலைமுடிக்கு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதனால் உங்கள் தலைமுடிக்கு உறுதியாவது மட்டுமின்றி சேதமடைந்த முடியை சீராக்கி கூந்தலின் வறட்சியையும் சமன் செய்கிறது. தேங்காய் நார் கொண்டு உச்சந்தையில் தேய்க்கும் போது உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

இரத்த ஓட்டம் சரியாக இருக்கும்போது, உங்கள் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.இந்த நார்ச்சத்து உங்கள் தலைமுடியை அதிக ஊட்டச்சத்துடனும், நீரேற்றத்துடனும் மாற்றும். இது உங்கள் தலைமுடியை மிகவும் வலிமையாக்குவதோடு, கூந்தல் உதிர்வு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. எனவே இந்த இயற்கை நார் உங்கள் முடி பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

தேங்காய் நார் ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடிக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுத்த வேண்டும்? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தேங்காய் நாரை உங்கள் தலைமுடியின் மேல் தேய்த்தால் அது வேலை செய்யாது. ஆனால் தேங்காய் நாரில் இருந்து பெறப்படும் நீரை கொண்டு உங்கள் தலைமுடியை வாஷ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் நார் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு கிண்ணத்தில் 1 கைப்பிடி தேங்காய் நாரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, பின்னர் அந்த தண்ணீரை தேங்காய் நார் உள்ள கிண்ணத்தில் ஊற்றவும். இதனை குறைந்தது 3 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற விடவும், பின்னர் ஒரு சல்லடை பயன்படுத்தி தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். பின்னர் உலர வைத்து சீவினால் உங்கள் கூந்தல் மிருதுவாக இருப்பதை நீங்கள் உணரலாம்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!