இவ்வளவு பணம் கிடைச்சு என்ன பிரயோஜனம்…? இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!


சீனாவில் இளைஞர் ஒருவர் இறக்கும் தருவாயில் தன் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் யாவ் சே என்பவர். இவர் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையை அறிந்த இவரது தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முன்வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களது ரத்த மாதிரிகள் பொருந்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் இவர்கள் யாவ் சேயின் உண்மையான பெற்றோரை கிடையாது. அதன்பின் இது குறித்து உண்மையான காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் 28 ஆண்டுகளுக்கு முன்பு யாவ் சே பிறந்த மருத்துவமனையில் இந்த தவறு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அவரது உண்மையான தாயும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இதனால் தனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு இழப்பீடு கேட்டு யாவ் சே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி நீதிமன்றம் ஒரு மில்லியன் யூரோக்கை இழப்பீடாக வழங்கியது. இந்நிலையில் யாவ் சேவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றது. புற்றுநோய் செல்கள் கல்லீரலை கடந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் மருத்துவர்கள் மேல் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் யாவ் சே தனக்கு கிடைக்கும் இழப்பிட்டில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!