மாடல் அழகி சடலமாக மீட்பு… பிரபல கால்பந்து வீரருடன் காதலா …?


கால்பந்து வீரரின் காதலியும் மாடல் அழகியுமான 25 வயதுடைய பெண் குடியிருப்பில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லினில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மாடல் அழகி Kasia Lendirt(25) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Kasia ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்பின்பு இவர் முன்னாள் காதலனை பிரிந்து கால்பந்து வீரரான 32 வயதுடைய jerom Boteng என்பவருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று பிரிந்துள்ளனர். இவர்கள் பிரிந்ததற்கு துரோகம் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கால்பந்து வீரரை “பிசாசு” என்று கூறிய Kasia இந்த பிரிவில் உருவான தாக்கத்தில் இருந்து மீண்ட பிறகு இதுகுறித்து கட்டாயமாக பேசுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!