ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் செய்த கொடூர செயல்..!


செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆப்பில் விளையாடி பலரும் பல லட்சங்களை இழந்து வருகின்றனர். எனவே, அந்த ஆப்பை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் இந்த ஆன்லைன் ரம்மிக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும், சிலர் தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த எல்வின் பிரட்ரிக்(30) என்கிற வாலிபர், ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ. 7 லட்சத்து 64 ஆயிரம் இழந்ததால் கோவையில் இருந்து நடந்தே திருப்பூருக்கு வந்து ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து தற்கொலைகள் அதிகரித்து வருவது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: tn.flash

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!