​சித்ராவின் டேட்டிங் விவகாரங்கள் உண்மையா.? வெளிவரும் புதுப்புது தகவல்கள்..!


நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் மீட்கப்பட்ட ஆதாரங்களால் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ராவின் தற்கொலை வழக்கில் ஹேம்நாத் மட்டுமே தொடர்புடையவராக பார்க்கப்படும் சூழலில் அவரது நெருங்கிய தோழிகள் பல இடங்களில் அளிக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பலரை காப்பாற்றும் நோக்கில் தனது மகனை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளதாக அவரது தந்தை குற்றசாட்டு.​


ஹேம்நாத் மட்டுமே காரணமா?

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் கைதாகியுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத்துதான் காரணம் என்று அவரது தாய் விஜயா குற்றம் சாட்டியதால் நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத்தை 6 நாட்களாக விசாரித்து வந்த நிலையில் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் கைதாகியுள்ள ஹேம்நாத் சித்ராவை சந்தேக கண்ணோட்டத்தில் கேள்வி எழுப்பி சித்ரவதை செய்து வந்த விவகாரம் மட்டுமே தற்போது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.


​ஹேம்நாத்தின் கொடுமைகள்

கடைசியாக சித்ரா நடித்து வந்த அந்த சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவேண்டாம் என சித்ராவுக்கு ஹேம்நாந்த முட்டுக்கட்டை போட்டுள்ளார். அதன்படி, சீரியலில் நடித்து வந்த கதாநாயகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என சித்ரா இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். அதனால் படப்பிடிப்பில் பரபரப்பு மூண்டுள்ளது. காதலனின் சந்தேக கேள்விகளால் பல விஷயங்களை அரை மனதாக செய்து வந்த சித்ராவுக்கு கொடுமைகள் தீரவில்லை. இந்த நிலையில்தான் ஹேம்நாத்தின் அப்பாவை செல்போனில் தொடர்பு கொண்ட சித்ரா, திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், ஹேம்நாத் என்னை சந்தேகம் பிடித்து சித்ரவதை செய்து வருவதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். அந்த ஆடியோ பதிவு சித்ராவின் செல்போனில் பதிவாகியிருந்த நிலையில், ஹேம்நாத் அதை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. சித்ராவின் தற்கொலைக்கு பிறகு அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், சைபர் க்ரைம் உதவியுடன் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்டு ஹேம்நாத்தை கைது செய்துள்ளனர்.


​மேலும் சில

தனியார் தொலைக்காட்சியில் காமெடி சீரியலில் நடித்து வந்த சித்ரா அந்த சீரியலின் வசனம் எழுத்தாளரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமணம் வரைக்கும் சென்ற இவர்களது காதல் திடீரென நின்றுள்ளது. பின்னர் தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் ஜொலிக்க தொடங்கிய சித்ராவுக்கு போலி தொழிலதிபர் ஹேம்நாத்தை சந்தித்துள்ளார்.


​ஆடம்பர ஈர்ப்பு

ஒருநாள், தனது நெருங்கிய தோழிக்கு ஹேம்நாத்தின் புகைப்படத்தை அனுப்பிய சித்ரா, ஹேம்நாத்தை காதலிப்பதாகவும், ஆள் எப்படி என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சித்ராவின் தோழி, ஹேம்நாத் பார்க்க வயசானவர் மாதிரி இருக்கு என கூறியுள்ளார். ஆனால், ஹேம்நாத் திருவேற்காட்டில் சொந்தமாக திருமண மண்டபம் நடத்தி வருவதாகவும், நல்ல வசதியானவர் என்றும் சித்ரா கூறியதாக தகவல். மேலும், ஹேம்நாத்தின் நண்பரான அமைச்சரின் மகனுக்கும் சித்ரா மீது ஈர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.


​டேட்டிங் விவகாரங்கள் உண்மையா?

சித்ராவின் மரண வழக்கில் தற்போது ஹேம்நாத் கைது செய்யப்பட்டதுடன் இந்த விவகாரம் முடிவுக்கு வராது என தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்ராவின் தனிப்பட்ட நடவடிக்கைகள் வெளியாகியுள்ளன. சித்ராவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல் என கூறும் அந்த செய்தி குறிப்பில், சித்ரா பல நேரங்களில் டேட்டிங் சென்றதாகவும், அண்மையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஒருவருடன் டேட்டிங் சென்று அப்போது எடுக்கப்பட்ட நெருக்கமான வீடியோக்களை வைத்து சித்ரா மிரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோ விவகாரம் ஹேம்நாத்துக்கு தெரிந்து விட்டதோ என்று சித்ரா பயந்ததாகவும் கூறுகின்றனர். டேட்டிங் நடவடிக்கைகளில் இருந்து வந்த சித்ரா பெசன்ட் நகர் அபார்ட்மென்டுக்கு குடியேறியதும், ஆடி கார் வாங்கியதும் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவருடைய தோழி கங்கா என்பவர் விவரித்துள்ளார். சித்ராவின் மரணத்தில் அரசியல் வாடையும் வீசுவதால், பலபேரை காப்பாற்றுவதற்காக ஹேம்நாத் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது தந்தை குமுறுகிறார்.- source: ulaga.seythippakirvu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!