தூக்கத்திலேயே மரணமான இத்தாலி கால்பந்து அணி வீரர்..!


உலக கோப்பையை வென்ற இத்தாலி கால்பந்து அணி வீரர் பாலோ ரோஸ்சி மரணம் அடைந்தார்.

1982-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இத்தாலி கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் பாலோ ரோஸ்சி. அந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்ற பாலோ ரோஸ்சி பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்ததும் அடங்கும். சர்வதேச போட்டிகளில் இத்தாலி அணிக்காக 20 கோல்கள் அடித்து இருக்கும் அவர் கிளப் போட்டிகளில் 134 கோல்களும் அடித்துள்ளார்.

ஓய்வுக்கு பிறகு கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றி வந்த பாலோ ரோஸ்சி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 64 வயதான பாலோ ரோஸ்சி நேற்று முன்தினம் இரவு தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். பாலோ ரோஸ்சி மறைவுக்கு இத்தாலி நாட்டு அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லா மற்றும் அந்த நாட்டு கால்பந்து சங்க நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!