விரைவில் சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்..?


சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் (கேலக்ஸி X) அடுத்த மாதம் வெளியிட இருப்பதை அந்நிறவன மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறார்.

சாம்சங் கேலக்ஸி X என அழைக்கப்பட இருக்கும் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் உறுதியாக வெளியிடப்படவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் காப்புரிமைகளில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

முந்தைய காப்புரிமைகளை விட இம்முறை வெளியாகியிருக்கும் காப்புரிமையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போனினை ஒருபக்கமாக மடித்து டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என தெரிவித்திருந்த நிலையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் ஸ்மார்ட்போனினை மேல் பக்கமாக மடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மடிக்கும் பகுதியில் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. இதனால் ஸ்மார்ட்போனினை மடிக்கும் போது எவ்வித அறிகுறியும் இருக்காது.

எனினும் சாம்சங் இந்த பிரச்சனையை எவ்வாறு சாம்சங் சரி செய்ய இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புகைப்படங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் AMOLED டிஸ்ப்ளேக்களை அதிக உறுதியாகவும், அடிக்கடி மடிப்பதற்கு ஏற்ப தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புகைப்படத்தில் பக்கவாட்டுகளில் பெசல்கள் வளையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரச்சனை இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஒருபக்கம் மட்டுமே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!