டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறையில் மாணவர் கொலையா..? தற்கொலையா..?


திருப்பூர் மங்கலம் ரோடு எம்.பி.எஸ். தியேட்டர் பின்புறம் உள்ள பாரப்பாளையத்தை சேர்ந்தவர் சரத் பிரபு.

இவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் சரத் பிரபு இன்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சரத் பிரபு உடலை மீட்டனர்.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர் சரத்பிரபு இறந்தது குறித்து திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைப்பில் உள்ளனர்.

ஏற்கனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து காரணம் இன்னும் தெரியாத நிலையில் மேலும் ஒரு மாணவர் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!