தமிழகத்தில் பாஜக பற்றி வெளியான அதிர்ச்சி முடிவு!!


தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லையென கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்தியா டுடே சார்பில் தமிழகத்தில் உள்ள 77 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், பாஜக கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு, சுமார் 71% பேர் முடியாது என்று பதிலளித்துள்ளனர். அதில் 15% பேர் முடியும் எனவும், 14% பேர் கருத்துக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக கட்சி நோட்டவை விட குறைந்த வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்த நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் அக்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!