சுசாந்த் சிங்குடன் டேட்டிங் சென்றதை ஒப்புக்கொண்ட இந்தி நடிகை சாரா அலிகான்


நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்துடன் முன்பு விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் (என்சிபி) இந்தி நடிகை சாரா அலிகான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குறித்து நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாராஅலிகான் ஆகியோரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர்,ராகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஆகியோரிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகைகள் தீபிகா படுகோனேவிடம் மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

முன்னதாக ராகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து நடைபெற்ற விசாரணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு சொந்தமானது என ராகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளனர்.

அதுபோல் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்துடன் முன்பு விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் (என்சிபி) இந்தி நடிகை சாரா அலிகான் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையிலுள்ள சுசாந்தின் இல்லத்துக்கும், லோனாவாலாவில் உள்ள பண்ணை வீட்டுக்கும் அடிக்கடி சென்றதாக சாரா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசாந்துக்கு போதைப் பொருள் பழக்கம் உண்டு எனவும், தனக்கு அந்த பழக்கமில்லை எனவும் அவர் கூறியதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

சாரா 2018 ஆம் ஆண்டு ‘கேதார்நாத்’ படத்தில் சுஷாந்திற்கு ஜோடியாக அறிமுகமானார். அப்போது இருவருக்கும் காதல் என்ற வதந்தி பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன. இருப்பினும், இருவரும் அதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனிடையே நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!