நடிகர் அர்ஜூன் கபூரை தொடர்ந்து நடிகை மலைக்கா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு


இந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் கபூரை தொடர்ந்து நடிகை மலைக்கா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தி திரையுலக பிரபலங்கள் இடையே கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் பாதிப்புகள் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இன்று தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது எனது கடமையாகும்.

நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனக்கு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் கபூரின் காதலியான மலைக்கா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை மலைக்காவின் இளைய சகோதரி அம்ரிதா அரோரா உறுதிப்படுத்தி உள்ளார்.

அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். உடல்நலம் பெற்று வலிமையுடன் திரும்புவேன் என மலைக்கா அரோரா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!