ஒருவரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும்… கோலி எச்சரிக்கை


ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி ஆர்சிபி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீகரம் சென்றுள்ளனர். தற்போது ஒருவார தனிமைப்படுத்துதலில் உள்ளனர். இந்த நேரத்தில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் சக வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நான் பின்பற்ற வேண்டும். பாதுபாப்பு வளையம் என்பதில் நான் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எந்த நேரத்திலும் இதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனென்றால், ஒரு தவறு செய்தால், நம்முடன் உள்ள ஒருவரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் கூட இதை விரும்பக்கூடாது’’ என்றார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!