எந்த துன்பங்கள் வந்தாலும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார் தெரியுமா..?


சாய்பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரீட்சையே தவிர மற்றபடி சாய்பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத சக்தியாகவே விளங்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்கும். எல்லாவித வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லவர் சாய்பாபா. பாபா ஒரு குரு, ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கி வாருங்கள்.

இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார்.

நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும். கர்மங்களை குறைத்துக் கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என் மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். கவலைப்படாமல் இரு. அப்பா நான் இருக்கிறேன், கோபம் வேண்டாம். என்னை தினம் தினம் நீ வழிபடும் அனைத்தையும் நான் ஏற்பேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. எவரும் எதையும் நாடமுடியாது. என் நாமத்தை உச்சரிக்கும் உன் மனம் தெளிவாகும். – Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!