பழுது பார்க்கும் போது ஐபோன் பேட்டரி வெடித்ததில் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்..!


சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள ஆப்பிள் ஐபோன் ஸ்டோரில் அதிக சூடான ஐபோன் பேட்டரி வெடித்தது. இதனால் அருகில் இருந்த ஊழியர் காயமடைந்தார்.இதனையடுத்து அருகில் இருந்த மக்கள் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தியில், ” ஜூரிச் நகரில் உள்ள ஆப்பிள் விற்பனையகத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்தார். ஆப்பிள் போனை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் பேட்டரியை எடுக்கும்போது வெடித்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தால் ஊழியரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்த 7 ஊழியர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.நடந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஐபோன் பேட்டரி வெடித்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!