தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..!


தமிழகத்தில் பெற்றோர்களின் கவனக்குறைவால் தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்து வருவது அதிகமாகிக்கொண்டே செல்கிறது. தண்ணீர் வாளியில் விழுவது, பள்ளத்தில் விழுவது, ஆழ்துளை கிணற்றில் விழுவது, கொதிக்கும் சாம்பாரில் விழுவது என தொடர்கதையாகிவிட்டது. அந்த வகையில் சென்னையில் மேலும் ஒரு சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சமபவம் நடந்துள்ளது.

செல்வராஜ் என்பவர் சென்னை குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 6). செல்வராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே லட்சுமணன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் அந்த வீட்டின் முன் சிறுவன் சந்தோஷ் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த சுமார் 14 அடி ஆழமுள்ள நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறிக்கொண்டு வந்து பார்க்கையில் தண்ணீர் தொட்டிக்குள் அந்த சிறுவன் மூழ்கிவிட்டான் என கூறப்படுகிறது.

உடனே அந்த சிறுவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!