உயிருக்கு போராடுகிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..? தென்கொரிய அதிகாரிகள் விளக்கம்..!


கிம் ஜாங் உன் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று தென்கொரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் கொரோனாவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்திலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வந்தவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது நாட்டை மர்ம தேசமாக வைத்திருக்கும் கிம் ஜாங் அன் கடந்த சில வாரங்களாகவே பொது வெளியில் தோன்றவில்லை.

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை. கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில், இருதயக்கோளாறுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிம் ஜாங் அன், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக திடீரென செய்திகள் வெளியாகின. கிம் ஜாங் அன் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. கிம் ஜாங் அன் உடல் நலம் பற்றிய செய்திகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதாக அமெரிக்காவும் அறிவித்தது. ஆனால், கிம் ஜாங் அன் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளிவரும் தகவல்களை அண்டை நாடான தென்கொரியா மறுத்துள்ளது. தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!