5ஜி ஐபோன் என்ன ஆனாலும் வெளியாகும் என தகவல்..!


ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு நிச்சயம் அறிமுகம் செய்யும் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 5ஜி ஐபோன் மாடல்களின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், 5ஜி ஐபோன் மாடலின் உற்பத்தி பணிகள் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் 5ஜி ஐபோன் மாடல்கள் வெளியீட்டில் எவ்வித தாமதமும் இருக்காது என தெரிகிறது. ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கிறது.

கடந்த மாதம் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மூடப்பட்டு இருந்ததில் 80 சதவீத ஸ்டோர்கள் திறக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐபோன்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேக் சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விநியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!