200 ஊழியர்களுக்கு 70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ்… அமெரிக்க நிறுவனம் அசத்தல்


அமெரிக்க நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒட்டு மொத்தமாக 200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கி அசத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ‘செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ்’ எனும் தனியார் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஊழியர்களின் மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான் (வயது 81) உரையாற்றினார்.

அப்போது அவர் ஊழியர்களிடம் தங்களது கையில் உள்ள சிவப்பு நிற உறைகளை பிரித்து பார்க்க சொன்னார். அதன்படி அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் அவரவருக்கான கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது பணி அனுபவம் அடிப்படையில் போனஸ் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டு இன்னும் பணியையே தொடங்காத ஊழியர் ஒருவருக்கு 100 டாலர்கள் போனஸ் தொகை உள்பட அதிகபட்ச தொகையாக 2 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒட்டு மொத்தமாக 200 ஊழியர்களுக்கு 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்) போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!