சாலையில் பலூன் விற்ற சிறுவனைக் கொஞ்சிய பிரபல நடிகை ரூ எம்.பி… வைரல் புகைப்படம்..!


வங்க மொழி பட நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான் சாலையில் பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவனை தூக்கிக் கொஞ்சிய படங்கள் இணையவாசிகளின் இதயத்தைக் கவர்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நுஸ்ரத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில படங்களை பகிர்ந்திருந்தார். அதில், “இந்த வார இறுதி நாட்கள் சிறப்பாகிவிட்டது… சிறப்பு நபரால்… ஒன்றரை வயது குழந்தை சாலையில் பலூன் விற்றுக் கொண்டிருந்தது அழகாக மற்றும் வண்ணமயமான இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.


நுஸ்ரத் அந்த குழந்தையை கட்டியணைத்து மடியில் உட்கார வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் இணையவாசிகளை ஈர்த்துவிட்டது. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேர் இந்த படத்தை லைக் செய்துள்ளனர். பலரும் வாழ்த்துகள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெங்காலி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நுஸ்ரத். அதன் பிறகு திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து இப்போது எம்.பி-யாகவும் ஆகிவிட்டார். தன்னுடைய கணவருடன் இருக்கும் படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு கிறங்கடிக்கு நுஸ்ரத், சிறுவன் படத்தை வெளியிட்டிருப்பது பலரையும் ஈர்த்துள்ளது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!