குழிக்குள் இறங்கி 13 நாளாக தண்ணீர் மட்டும் பருகி சாமியார் மவுன விரதம்..!


ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே சாமியார் ஒருவர் 13 நாட்களாக தண்ணீர் மட்டும் பருகி மவுன விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

யோகா ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் ஆப்பக்கூடல் நல்லி கவுண்டன் புதூரில் அவரது சொந்த இடத்தில் பத்தடி ஆழம் 10 அடி சுற்றளவு கொண்ட குழியை வெட்டி பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடந்த 12 நாட்களாக குழிக்குள் தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி மவுன விரதம் இருந்து வருகிறார்.

நிஜ ஆனந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என்று சொல்லப்படும் இவர் 48 நாட்கள் மவுன விரதம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று 13-வது நாளாக பாதாள லிங்கேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், நவதானியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டும் லிங்கத்தை மலர்களால் அலங்கரித்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

யாக பூஜையில் கலந்து கொள்ள ஈரோடு, அந்தியூர், கோபி, ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!